கல்லுாரியில்
சேரவுள்ள, சென்னை ஏழை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, தன்னார்வ
அமைப்பு, அழைப்பு விடுத்துள்ளது.'டீம் எவரெஸ்ட்' என்ற தன்னார்வ அமைப்பு,
ஏழை, மாணவ - மாணவியர் கல்லுாரியில் சேர உதவி செய்து வருகிறது. இந்த ஆண்டு,
பெற்றோர் இல்லாத மற்றும் ஆதரவற்ற, சென்னையைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு
உதவித்தொகை வழங்கி வருகிறது.
இது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும்.இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவருக்கு, ஆண்டுதோறும், 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த பணத்தை கல்வி, விடுதி, பேருந்து, புத்தக கட்டணங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், இந்த அமைப்பு நடத்தும், வார இறுதி வகுப்புகளில், ஆண்டுக்கு, 100 மணி நேரமாவது பங்கேற்க வேண்டும்; அதேபோல், உள்ளிருப்பு பயிற்சிகளிலும் பங்கேற்க வேண்டும்.விருப்பம் உள்ள மாணவர்கள், 89556 64410 என்ற எண்ணில், 'மிஸ்ட் கால்' கொடுக்குமாறு, அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...