கலிஃபோர்னியா: செயற்கை நுண்ணறிவு மூலம் உணவு விடுதி, மருத்துவமனைகளில் நமக்காக செல்போன்களில் பேசி
அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தரும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற கணிணி மென்பொருள் மாநாட்டில் கூகுள் தனது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை அறிமுகம் செய்துள்ளது. பல்லாயிரம் பேர் பங்கேற்ற இந்த மாநாட்டில் பேசிய தமிழரான கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் டியூப்லக்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தினார். இது ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருள், உணவு விடுதி, மருத்துவமனை போன்ற இடங்களில் நமக்காக செல்போனில் பேசி அப்பாயின்ட்மென்ட் பெற்றுக்கொடுக்கும். இப்படி நமக்காக கூகுள் பேசிக்கொண்டிருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மனிதக் குரலில் தெளிவாக பேசும் வண்ணம் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேசுபவர்களின் கேள்விக்கு ஏற்ப சமயோஜிதமாக இந்த மென்பொருள் பதிலளிக்கும். அதோடு பதிலுக்கு கேள்விகளையும் கேட்கும். இது சரியான முறையில் செயல்பட்டால் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் என சுந்தர் பிச்சை பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்த மென்பொருளை சில வாரங்களில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...