உலகின் மிக பிரபலமான உடனடி-செய்தி (இன்ஸ்டென்ட் மெசேஜிங்) பயன்பாடான
வாட்ஸ்ஆப், சுமார் 1.5 பில்லியன் தினசரி பயனர்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு
நாளிலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, வாட்ஸ்ஆப் புதிய
மேம்படுத்தல்களை உருட்டிய வண்ணம் உள்ளது.
உலகின் மிக பிரபலமான உடனடி-செய்தி (இன்ஸ்டென்ட் மெசேஜிங்) பயன்பாடான
வாட்ஸ்ஆப், சுமார் 1.5 பில்லியன் தினசரி பயனர்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு
நாளிலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, வாட்ஸ்ஆப் புதிய
மேம்படுத்தல்களை உருட்டிய வண்ணம் உள்ளது.
அப்படியாக, அடுத்த ஒரு வாரத்திற்குள் வாட்ஸ்ஆப்பில் இடம்பெறவுள்ள 6 புதிய
அம்சங்களை பற்றிய தொகுப்பே இது. சோதனை கட்டங்களை தாண்டி வெகுஜன மக்களின்
கைகளுக்கு செல்லும் அந்த 6 புதிய அம்சம் தான் என்ன.?
01. கிளிக் டூ சாட்.!
இந்த வாட்ஸ்ஆப் அம்சமானது, உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்டில் சேமிக்க படாத ஒரு
எண்ணிற்கு கூட மெசேஜ் செய்ய அதுவும். இந்த புதிய அம்சம் அந்த தேவையற்ற
எண்களை சேமிப்பதற்கான தேவையை குறைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இன்னும் சுருக்கமாக சொன்னால், ஒரு சேமிக்கப்படாத எண்ணுடன் உரையாடலை தொடங்க
ஒரு இணைப்பை உருவாக்க இந்த அம்சம் அனுமதிக்கும். இது தொழில்
வல்லுனர்களுக்கு மிகவும் எளிதான அம்சமாக இருக்கும்.
02. பேஸ்புக் உடன் உடனடி லின்க் பரிமாற்றங்கள்.!
வாட்ஸ்ஆப் ஆனது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை நாம் அறிவோம்.
அதனால் இந்த புதிய அம்சம் அறிமுகம் ஆவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது
பயனர்களுக்கு 'Send To Whatsapp' விருப்பத்தின் மூலம் உடனடியாக ஒரு இணைப்பை
பகிர அனுமதிக்கும். இனி டிராப் டவுன் மெனுவில் உள்ள ஷேர் விருப்பத்தை அணுக
வேண்டிய அவசியம் இருக்காது.
03. க்ரூப் ஆடியோ கால்ஸ்.!
க்ரூப் வீடியோ கால்களுடன் சேர்த்து வாட்ஸ்ஆப், அதன் க்ரூப் ஆடியோ
அழைப்புகள் சார்ந்த அம்சத்திலும் கவனம் செலுத்தியது. அதன் விளைவாக, வரும்
வாரம் இந்த அம்சம் வெளியேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெயர்
குறிப்பிடுவது போலவே இந்த புதிய அம்சம் ஒரே நேரத்தில் பலருடன் வாட்ஸ்ஆப்
வாய்ஸ் கால் நிகழ்த்த அனுமதிக்கும்.
04. செலெக்ட் ஆல்.!
ஆண்ட்ராய்டுக்கான இந்த அம்சம். ஒரே நேரத்தில் அனைத்து மெசேஜ்களை
தேர்ந்தெடுக்க உதவும். இனி ஒவ்வொரு மெசேஜாக செலெக்ட் செய்து அவற்றை மார்க்
தெம் ஆஸ் ரீட் அல்லது அன்ரீட் என்று குறிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
உடன் இந்த அம்சம் அனைத்து சாட்களையும் ஒரே நேரத்தில், விரைவாக டெலிட் செய்ய
அனுமதிக்கும்.
05. மீடியா விசிபிலிட்டி.!
வாட்ஸ்ஆப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா தளத்தில் காணப்பட்டுள்ள இந்த அம்சமானது,
வாட்ஸ்ஆப் வழியாக கிடைக்கும் மீடியாக்களை போன் கேலரியில்
காட்சிப்படுத்தலாமா அல்லது வேண்டமா என்கிற அதிகாரத்தை பயனர்களுக்கு
வழங்கும்.
அறியாதோர்களுக்கு, இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்ஆப் ஐஓஎஸ் பதிப்பில் உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
Pls add this 9942758440 number our whatsapp group
ReplyDelete