பிளஸ்
1 சிறப்பு துணை தேர்வு முடிவுகள் வரும், 13ல் வெளியிடப்படுகின்றன.இது
குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
பிளஸ் 1 வகுப்புக்கு, ஜூனில் நடந்த சிறப்பு துணை தேர்வு முடிவுகள், வரும், 13ல் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற, 16 மற்றும் 17ம் தேதிகளில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகலுக்கு, மொழி பாடங்களுக்கு, தலா, 550 ரூபாய்; ஒவ்வொரு பாடத்திற்கும், 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கு, மொழி பாடங்களுக்கு தலா, 305 ரூபாயும், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...