வரும் 17ல் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங்

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான, ஆன்லைன் கவுன்சிலிங், வரும், 17ம் தேதி நடைபெற உள்ளது.ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், பல்வேறு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களில், இடம் மாறுதல் விரும்புவோருக்கு, வரும், 17ம் தேதி காலை, 10:00 மணிக்கு, அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், ஆன்லைன் வழியே கவுன்சிலிங் நடைபெறும்.


தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரிஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், தமிழாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கு, மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறவும், கவுன்சிலிங் நடைபெறும்.இட மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் மட்டுமே, ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.

Share this

0 Comment to " வரும் 17ல் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...