வெள்ளச் சேதங்களைப் பார்வையிடுவதற்காகத் திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக ஆய்வு செய்ய முடியாத நிலையில் சிறிய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தன் ஆய்வைத் தொடங்கினார்
கேரளாவை புரட்டிப்போட்டுள்ள வெள்ளம் 100 ஆண்டிகளில் இல்லாத அளவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். அங்குள்ள 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் கேரளாவுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2,23,139 பேர் 1,500-க்கும் அதிகமான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...