பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

பிளஸ் 2 துணை தேர்வுக்கான விடைத்தாள் நகல், இன்று வெளியிடப்படுகிறது.அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு எழுதியோரில், விடைத்தாள் நகல் கேட்டவர்களுக்கு, இன்று பகல், 2:00 மணிக்கு, scan.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகல் வெளியிடப்படுகிறது; இதை ஆய்வு செய்து கொள்ளலாம்.
மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தேவைப்படுவோர், 6ம் தேதி முதல், 8ம் தேதி வரை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this

0 Comment to " பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...