பிளஸ் 2 துணைத்தேர்வு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த இயக்ககம் வெளியிட்ட செய்தி: கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
தேர்வர்கள் விடைத்தாள் நகலினை ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கான கட்டணத் தொகையை முதன்மைக்
கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
மறு மதிப்பீடு கட்டணம்: ஒரு தாள் கொண்ட பாடத்துக்கு ரூ.505; இருதாள்கள் கொண்ட பாடம் (மொழிப் பாடம், ஆங்கிலம்)- ரூ.1,010.
மறுகூட்டல்: ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.205, இரு தாள்கள் கொண்ட பாடம் (மொழிப் பாடம், ஆங்கிலம், உயிரியல்)- ரூ.305

Share this

0 Comment to "பிளஸ் 2 துணைத்தேர்வு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...