நல்லாயிருக்கீங்களா தாத்தா என்று முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 3-ஆம் வகுப்பு படிக்கும் மழலை கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: நல்லாயிருக்கீங்களா தாத்தா என்று கேட்டு கருணாநிதிக்கு 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம்
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்தவர் மிக்கலே மிராக்ளின். இவர் கார்மெல் பப்ளிக் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ரசிகை. இவர் அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது.
கவலை கொண்டேன்
அந்த கடிதத்தில், எனக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தாத்தாவை மிகவும் பிடிக்கும். தாத்தா நீங்கள் உடல்நலம் குன்றியிருப்பதால் நான் அழுதேன். அதுவும் எல்லாரும் தூங்கும் நேரத்தில்t உங்கள் உடல்நலத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் நான் மிகவும் அழுதேன். உங்களுக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்.
மகிழ்ச்சி அடைந்தேன்
என் அம்மா என்னிடம் சொன்னார்கள்- நீ முன்னாள் முதல்வர் கருணாநிதி தாத்தாவுக்காக கடவுளிடம் பிரார்த்தனைt செய்தாய் அல்லவா. அதனால் அவர் தற்போது நலமாக உள்ளார் என்று எனது அம்மா சொன்னதும் நான் மகிழ்ச்சியானேன். பள்ளிக்கும் மகிழ்ச்சியாக சென்று வந்தேன் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...