கருணாநிதி இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவக்கம்


மாலை 4 மணிக்கு கருணாநிதி இறுதி
ஊர்வலம் தொடங்குகிறது என்று, திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.


காவேரி மருத்துவமனையில் 11 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு, நேற்று மாலை 6.10 மணிக்கு கருணாநிதி மரணமடைந்தார். இதையடுத்து நள்ளிரவில் கோபாலபுலம் இல்லத்திற்கு அவர் உடல் கொண்டு செல்லப்பட்டது. 3 மணி நேர அஞ்சலிக்கு பிறகு சிஐடி காலனிக்கு கருணாநிதி உடல் கொண்டு செல்லப்பட்டது.
இதன்பிறகு அதிகாலை ராஜாஜி ஹாலுக்கு கருணாநிதி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதன்பிறகு இன்று மாலை 4 மணிக்கு, அண்ணா சமாதி பகுதிக்கு ஊர்வலம் கிளம்புகிறது.
அங்கு கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. திமுக தலைமை கழகம் இதை அறிவித்துள்ளது.

Share this

0 Comment to "கருணாநிதி இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவக்கம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...