7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-ந்தேதி தமிழ்நாடு
இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறுவதால் தற்போதுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை முடிவுறு பணித்தொகுதியாக அறிவித்து, அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் அதே பணியிடத்திலேயே 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி முதல் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் இடைநிலை ஆசிரியர்கள் திரளாக பங்கேற்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...