குறைந்தபட்ச இருப்புத் தொகைக்காக அபராதம் விதித்த வங்கிகளில் 70 சதவீதம் அபாரம் விதித்த பாரத ஸ்டேட் வங்கி முதலிடம்!
2017-2018-ம் நிதியாண்டில் வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை இருப்பில் வைக்காத வாடிகையாளர்களுக்கு 5000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதித்துறை இணையமைச்சர் பிரதாப் சுக்லா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையுடன் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.2,433 கோடி அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-2018 நிதியாண்டில் குறைந்தபட்ச இருப்புத் தொகைக்காக அபராதம் விதித்த வங்கிகளில் 70 சதவீதம் அபாரம் விதித்த பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரூ.590 கோடி அபராதம் விதித்த HDFC வங்கி 2-ம் இடத்திலும், ரூ.530 கோடி அபராதம் விதித்த Axis வங்கி 3-ம் இடத்திலும் உள்ளது.
குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததால் ரூ.317 கோடி அபராதம் விதித்த ICICI வங்கி 4-வது இடத்திலும், ரூ.211 கோடி அபராதம் விதித்த PNB 5-வது இடத்திலும் உள்ளது. ஜன்தன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this

0 Comment to "குறைந்தபட்ச இருப்புத் தொகைக்காக அபராதம் விதித்த வங்கிகளில் 70 சதவீதம் அபாரம் விதித்த பாரத ஸ்டேட் வங்கி முதலிடம்!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...