Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கூட்டு முயற்சியால் நற்செயல் விருட்சமாகும்! - AAA

அசத்தும் அரசுப் பள்ளி குரோம்பேட்டை
MBN அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி .
இன்றைய  தமிழகத்தின் தினசரி ஊடக செய்திகளில் கல்விக்கான பிரிவு செய்திகள் தொடர்ந்து வருவதை நாம்  பார்க்கிறோம். அவற்றுள் மிக முக்கியமானது மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது என்றால் அது மிகையாகாது. இந்த சூழலில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தரமான கல்வியை மாணவருக்கு அளித்திடவும்
பள்ளிகள் தங்களை பல வழிகளில் புனரமைத்து , மாற்றங்களை முன்னெடுத்து   கற்பித்தலில் புதுமையை நோக்கிச் செல்கின்றன , தொழில் நுட்ப வழிக் கல்வியையும் , புதிய பாடநூலில் QR கோடு செயலியைப் பயன்படுத்த  அறிவுறுத்தப்படும் நிலையும் கொண்ட காலகட்டமாக இருக்கும் இவ்வேளையில் , கணக்குப் பாடத்தை கணினி வழிக் கற்க இப் பள்ளி மாணவிகளுக்கு கணக்கு கணினி ஆய்வகம் எனப் பொருள்படும் Math Computer lab சமீபத்தில்  திறக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மேல்நிலைப்பள்ளிகளில் , பதினொன்று  , பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத்தான்  கணினி ஆய்வகம்  பயன்படுத்தி வருவதை நீங்கள் பார்த்து  இருப்பீர்கள் , ஆனால் நடுநிலை வகுப்புகளான 6, 7, 8 வகுப்பு மாணவர்கள் பயன்படுத்த இந்த கணக்குப் பாட கணினி ஆய்வகம் மிக நவீன முறையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது இப்பள்ளியில் .
   தொழில் நுட்ப வகுப்பறைகளை ஊக்குவிக்கும் பள்ளிக் கல்வித் துறையின் செயல்முறைகளுக்கிணங்க , மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலரின் அனுமதியின் பேரில் இப்பள்ளியின்  தலைமை ஆசிரியர் இத்திட்டத்தை மாணவிகளின் நலன் கருதி, இப்பள்ளிக்கு கணக்கு கணினி ஆய்வகமாகப் பயன்பாட்டுுக்குக் கொண்டு வந்துள்ளார்.
ஆம் , இந்தக் கல்வியாண்டின் ஆரம்பத்தில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளளப்பட்டு , கடந்த மாதத்திலிருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே , ஏன் தமிழகத்திலேயே இப்படி ஒரு புதுமை வகுப்பறை , அரசுப் பள்ளிகளில் இவ்வளவு கணினிகளுடன் இருக்கின்றதா எனில் ஐயம் தான் , இருக்க வாய்ப்புகள் இல்லை எனக் கூறலாம் .

ஏனெனில் மாணவிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணினி தரப்பட்டு  , 53 எண்ணிக்கையிலான கணினிகள்  பொருத்தப்பட்டு மிக அழகாகக் காட்சி தருகிறது கற்க மேத் லேப் (Karka Math Lab) .ஆம் அந்தக் கணினிகளில் பயன்படுத்தப்படும்  மென்பொருள் கற்க மேத் எனப் பெயர் கொண்டது.
இங்கு கணினி ஆய்வக  வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னர் , கணக்குப் பாடத்தில் அடிப்படை செயல்களான கூட்டல் , கழித்தல் ,பெருக்கல் , வகுத்தல் ஆகியவற்றில் மாணவர்களை பயிற்சித் தாள்   (WORK SHEET ) வழியாக சோதித்து அவர்களது நிலைப்பாட்டை கணினிக்குள் குறித்து வைத்து அதன் பிறகே வகுப்புகள் ஆரம்பமாயின.
எந்த ஒரு மாணவியும் எந்தத் திறனும் விடுபடாமல் கற்றுக் கொள்ள இக் கற்க மேத் லேப் 100% உதவுகிறது.
ஒருவருக்கு கூட்டல் கணக்குத் திறன்கள் தெரிந்த பிறகு , கழித்தலில்  அடிப்படை சாதாரண கழித்தல் , கடன் வாங்கிக் கழித்தல் , 100 இலிருந்து , 1000 த்திலிருந்து கழித்தல் , பிறகு ஒரு இட மதிப்புப்  பெருக்கல் , இரு இட மதிப்புப் பெருக்கல் , அதே போல் வகுத்தல் கணக்குகள் தரப்பட்டு இம்மென்பொருள் தயார் செய்யப்பட்டுள்ளது. 
இந்த வரிசை அடிப்படையில் மாணவர்கள் தானே கற்றலுக்கு இவ்வகுப்பறை வழி வகுக்கிறது. ஒவ்வொரு கணக்குகளும் நோட்டுகளில் போட்டு தீர்வு காணப்பட்டு பின்னர் கணினியில் அதற்கான தலைப்புகளில் விடையினை அளிக்க , சரியா தவறா என   (சரி)  அல்லது   ( தவறு)  இவற்றிற்கான   குறியீடுகள் திரையில் வருகின்றன.
அது ஒரு  சுற்று முழுமையடைந்த  பிறகு தான்மாணவர்கள் அடுத்த நிலைக்குச் செல்ல இயலும் , அவ்வாறு அந்த நிலையில் முழுமையடையவில்லை என்றால் அதே படி நிலையில் பின்தங்கி இருப்பர் , இது போன்று ஒவ்வொரு படிநிலையிலும் ஆசிரியர்கள் அவர்களுக்கு  வழிகாட்டி முன்னேறிச் செல்ல உதவ வேண்டும்.
நான்கு அடிப்படை செயல்பாடுகளிலும்  திறன் பெற்றவர் தொடர்ந்து முன்னேறி பாட நூலில் உள்ள கணிதப் பிரிவுகள் ஒவ்வொன்றாக கற்க வழிவகை செய்யப்படுமாறு  மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் பாட அறிமுகம்
( Introduction) , கணக்கு விளக்கங்கள் (Explanations ), பயிற்சிகள், (Exercises), முயற்சி செய் (Try These) பகுதி என, பாட நூலில் உள்ள  அனைத்தும் பவர்பாயிண்ட்  (Power Point presentation) காணொலிகள் (Video  lessons) , மதிப்பீட்டு பகுதி (Evaluation Portion)ஆகியவற்றின்  துணை கொண்டு  மென்பொருளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு வரும் போது மாணவர்களில் ஒரு குழுவினர் கழித்தல் படி நிலையிலும் , ஒரு குழுவினர் பெருக்கல் படிநிலையினும் , மற்றொரு குழுவினர் வகுத்தல் செயல்பாடுகள் , மீத்திறனுள்ள ஒரு குழுவின்  குழந்தைகள் பாடநூலின் பாடப் பகுதியிலும் இருப்பர்.
உதாரணத்திற்கு ,
47 மாணவர் உள்ள ஒரு ஆறாம் வகுப்பில் 12 பேர் இயற்கணிதம் என்ற பாடநூல் பாடப் பிரிவில் கற்க ஆரம்பிக்கின்ற போது 15 பேர் வகுத்தல் கணக்குகளையும் , 15 பேர் பெருக்கல் கணக்குகளையும் மீதமுள்ள  5 பேர் கழித்தல் கணக்குகளை செய்பவராகவும் இருக்கின்றனர்.
இந்த 15 பேர் வகுத்தல் கணக்குகளில் திறன் பெற்று அடுத்து இயற்கணித வகுப்பிற்குச் செல்ல வேண்டும். இதே போல ஒவ்வொரு நிலையிலிருந்தும்  அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்.
இந்த முறையில்  கற்றுக் கொள்ளுதல் மாணவரின் தானே  கற்றலுக்கு வழி வகுத்தாலும்,  ஆசிரியர்கள்  சிறு குழுக் கற்பித்தல் (Small  Group  Teaching) தொடர்ந்து  நிகழ்த்த வேண்டும் ,
ஆசிரியர்களுக்கும்  ஒரு சவாலான வகுப்பறை இது.  ஏனெனில்  ஆசிரியர்கள் முன் கூட்டியே இப் பாடப்பகுதிகளை ஆய்வகத்தில் சென்று கணினி வழியே ஒரு முறை பார்த்து அதன் பிறகு தான் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.
அதோடு ஒரு வகுப்பறை மாணவிகள் நாம் ஏற்கனவே கூறியபடி பல படி நிலைகளில் இருப்பர். ஒவ்வொருவருக்கும்  ஓரோரிடத்தில் சந்தேகம் வர , அவர்கள் எழுந்து நிற்கவோ அல்லது தங்கள் கைகளை உயர்த்தியோ தங்களுக்கு கற்றலில் இடர்பாடு என்பதை ஆசிரியர்களுக்கு உணர்த்துவர் , அப்போது அவரிடம் சென்று ஆசிரியர் சந்தேகம் தீர்த்து அடுத்த நிலைக்கு அவர்கள் செல்ல வழி காட்ட வேண்டும் , நான்கு வரிசைகளுடன் கூடிய இரு  பிரிவுகளாக மாணவர் பிரிக்கப்பட்டிருப்பர்.
ஒரு தலைப்பில் திறன் பெற்ற உடன் எழுந்து சென்று  தங்கள் பிரிவின் பகுதியில் இருக்கும்  தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் தாளில் தங்கள் பெயருக்கு நேராக எந்தத் தேதியில் எந்த தலைப்பு திறன் பெற்றுள்ளனர் என்பதை அவர்கள் பென்சிலால் குறிப்பிட வேண்டும்.
இதில் கற்கும் படி நிலைகளில் காணொலிகள் பார்க்க , கேட்க அவரவர் கணினிக்கு தனியாக ஹெட் செட்  பொருத்தப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தவும்  மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
இதுதான் கற்க மேத் கணினி  ஆய்வகத்தில் கற்றல் கற்பித்தல் நடைபெறும் முறை .
கணினியில் அமர்ந்து அதை இயக்கப் பழக்குவது , தங்களது பயன்பாட்டுப் பெயர்  (User Name) , கடவுச்சொல் (Password) பயன்படுத்தி ,  log in , log Out செய்து முடிப்பது என அனைத்தும் பயிற்சி தருவதாக  அமைந்தது தொடக்க நாட்களில் .
இந்த கற்க மேத் ஆய்வகக் கற்றலானது மாணவர்களிடம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பள்ளிக்கு ஒருவரும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வந்துவிடுகின்றனர். வழக்ககமானதை விட அதிக ஆர்வம் காட்டி  கணக்கு வகுப்பை எதிர் கொள்கின்றனர். தாங்கள் இருக்கும் நிலைகளை உணர்ந்து , அவர்களாகவே முன் வந்து வீட்டில்  பயிற்சி பெற்று வர ஆரம்பித்துள்ளனர்.
வரும் காலங்களில் எங்கள் பள்ளியில் கணக்குப் பாடத்தில் அடிப்படைத் திறன் பெறாது எந்த மாணவியும் இருக்க மாட்டார் என்பதை உறுதியுடன் கூறலாம்.
மேலும் இதன் வழிக் கற்கும் மாணவர்கள் , தன்னம்பிக்கைப்  பெற்றவராகவும் கணினிகளை இயக்கும் கூடுதல்  திறன் பெற்றவர்களாகவும் , கவனம் பெற்ற சிந்தனை ஒருமுகப்படுத்தும் பயிற்சி பெற்றவராகவும் சுய கட்டுப்பாடு ,பொறுமை, அமைதி காக்கும் வகுப்பறைகளை கற்க மேத் லேப் இல்  பின்பபற்றுபவராகவும்  என   மாற்றம் பெற்று  வருகின்றனர்.
உங்களுக்குள் ஒரு சந்தேகம் வரலாம். எனில் கரும்பலகை வழிக் கற்பித்தலை விட இது சிறந்ததா ? என .
அப்படிக் கூறி விட இயலாது. அது ஒரு வழி , இது ஒரு வழி அவ்வளவே . இதில் வேறு மாதிரியான திறன் பெறும் வழி , கரும் பலகை வழிக்கற்பித்தல்    வகுப்பறையில்    ஒட்டு மொத்த மாணவர்களுக்கு  வகுப்பு எடுக்கப்படும். தனிக்கவனம்  செலுத்துவது கணினி வகுப்பறைக் கற்பித்தலில் அதிகம். ஆகவே கணினி வழிக் கணிதக் கற்பித்தல் ஆய்வகம் சிறப்பானதாகக் கொள்ளப்படுகிறது.
இம் மாணவர்களுக்கு கற்க மேத் லேப் பயன்படுத்தும்  பல கணக்கு   ஆசிரியர்களுள்  நானும்  ஒரு கணக்கு ஆசிரியராக  இருப்பது எனக்கு மகிழ்வாக உள்ளது. மிகப்   பெரிய கூட்டு முயற்சியால் விதைக்கப்பட்டுள்ள இந்த நற்செயல் இன்னும் சில வருடங்களில்  மிகப் பெரிய விருட்சமாகும் என்பதில் பெரிய நம்பிக்கைக் கொள்கிறேன்.
அன்புடன்
உமா









1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive