கீழா நெல்லி ஒரு சிறு செடி வகையைச் சார்ந்தது. கீழா நெல்லி இலைகள் அளவில் மிகச் சிறியவை. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப் பொருள் காண்ப்படுகின்றது. மேலும், தாவரம் முழுவதும் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் அதிகபடியான வெள்ளைபடுதல் முழுமையாக சரிசெய்ய தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளும் ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நசுக்கி, அதனை இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர வேண்டும்.
மஞ்சள் காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இப்பிரச்னையை சரிசெய்ய கீழாநெல்லி ஒரு சிறந்த மருந்தாகிறது.
உடலில் தோல் நோய்கள் முற்றிலும் வராமல் தடுக்கும் கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டுதினமும் குளித்து வர வேண்டும். மேலும் கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி குணமாகும்.
கீழாநெல்லியை எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு போடும்போது குளிர்ச்சி தரும். கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள் சரியாகும். இதன் சாற்றை மஞ்சளுடன் சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரியாகும்.
கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும்.கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.
காலை, மாலை இருவேளையும் பாலுடன் கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால்விட்டு அரைத்து தொடர்ந்து அருந்த ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...