ஆரோக்கிய உடலுக்கு அவசியமான சாறு!

உடலில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் ஆரோக்கியமாக உடலை வைத்திருக்க உடலுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுவதை பூர்த்தி செய்வதற்கு பலச்சாறு&காய்கறி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்றைய கட்டுரை உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த சாறு பற்றி அறிந்துகொள்வோம். இது உடலுக்கு சக்தியை அளிக்கிறது.வேப்பம் சாறு மிகவும் சக்தி வாய்ந்த சாறு. உடலில் பல வகையான நோய்களுக்கு மருந்தாக சாறு பயன்படுகிறது.
1.வேப்பம்(Neem) சாறு சாப்பிடுவது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, இதனால் உடலில் ஏற்படும் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது.
2.வேப்பம்(Neem) சாறு தோல் தொடர்பான பிரச்சினைகளை நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தோலில் பருக்கள் இல்லாமலும் மற்றும் முகம் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.
3.நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பம் சாறு சாப்பிடுவது மிகவும் பயனுள்ளது. நீரிழிவு நோயானது வழக்கமான வேப்பம் சாற்றை உட்கொள்ளுவதன் மூலம் பெருமளவிற்கு கட்டுப்படுத்தப்படுகிறது.நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு பெரிய வரம் என்றே கூறலாம்.
4.வேப்பம் சாற்றில் கால்சியம் மற்றும் இரும்பு அதிகமாக காணப்படுகிறது, இது உடல் பலவீனத்தை அகற்றுவதன் மூலம் எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் உதவுகிறது.
5.குழந்தைகள் இந்த சாறை காலையில் குடித்து வந்தால் வயிற்றில் புழுக்கள் வளரவிடாமல் தடுத்து அவற்றை அளிக்கும்.இது பெரியவர்களுக்கும் பொருந்தும்.
முக்கிய குறிப்பு: வேப்பம் சாறை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.வாரத்திற்கு 3 - 4முறை பருகலாம்.

Share this