உங்களுக்குத் தெரியுமா? பூக்களின் மருத்துவக் குணங்கள்?
ஒவ்வொரு பூக்களிலும் ஒவ்வொரு மருத்துவக் குணங்கள் உள்ளன . பூக்களில் உள்ள அறிய மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துக்கொள்ள தொடர்ந்துப் படியுங்கள் .
ரோஜாப்பூ :-
ரோஜாப்பூவில் நறுமணம் மட்டும் இன்றி இது இருதயத்திற்கு வலிமையை தரக்கூடியது .பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கிவிடும் .மேலும் இது ரத்தம் விருத்தியடைய துணை செய்கிறது .
வெங்காயப் பூ :-
வெங்காயப் பூ வை சமைத்து சாப்பிட்டு வருவதால் வயிற்று வலி விரைவில் குணம் அடையும் .
அலரிப்பூ:-
பித்தம் , உடற்சூடு , சொறிசிரங்கு , புண் இரத்தம் ,தலையில் நமைச்சல் ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்கள் அலரிப்பூவை பயன்படுத்தினால் எளிதில் இது குணப்படுத்தும்.
செம்பருத்திப் பூ :-
செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது இவற்றின் இலை , பூ , வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை .
இருதய பலவீனம் மற்றும் இதய வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் செம்பருத்திப்பூ வை தண்ணீரில் போட்டு காய்ச்சி எடுத்து காலை ,மாலை குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.
வயிற்றுப்புண் , வாய்ப்புண் பிரச்சனை உள்ளவர்கள் செம்பருத்தி பூவின் 10 இதழ்களை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடையும் .மேலும் செம்பருத்திப்பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து அதை கசாயமாகக் காய்ச்சி பருகி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி , தலைவலி , மயக்கம் போன்ற பிரச்சனைகள் சரியாகும் .
செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் பருகி வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமடையும் ,மேலும் பூப் பெய்யாத பெண்களும் பூப்பெய்துவார்கள் .கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும் ,அதிக வயதாகியும் கருவுறாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப் பூ மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.மேலும் இதன் இதழ்களை கசாயம் செய்து பருகி வந்தால் வெள்ளைப்படுதலும் குணமடையும்.
பாதிரிப்பூ :-
பாதிரிப்பூ வால் பித்த சுரம் நீங்கும் மற்றும் வெள்ளை போக்கு நிற்க உதவும் .
தாழம்பூ :-
தாழம்பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் மற்ற எந்தக் கிருமிகளும் நெருங்காது . மேலும் இதயத்தை வலிமை அடிய செய்து உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும் .
மகிழம்பூ:-
Third party image reference
மகிழம்பூவின் மணம் கண்நோய் , தலைவலி , தலைப்பாரம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் .
சண்பகப்பூ :-
சண்பகப் பூவின் வாசனை மனமகிழ்ச்சியை கொடுக்கும் .இது வாத பித்த நோய் , காய்ச்சல் , பால்வினை நோய் , விந்து விரையம் ஆகிய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரும் .மேலும் இந்தப் பூவை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலை வலி குணமடையும் .
களாப்பூ :-
கண்களை தாக்கும் கரும் படலம் , வெண்படலம் , ரத்தப் படலம் , சதைப்படலம் போன்ற கண் நோய்களை அகற்ற களாப்பூ உதவி செய்யும் .
நெல்லிப் பூ :-
நெல்லிப் பூ உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் , இதனுடன் விழுதி இலை , வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட்டு வர காலையில் சுகபேதி உண்டாகும் . மலச்சிக்கலுக்கு இது மிகவும் சிறந்தது .

Share this

4 Responses to "உங்களுக்குத் தெரியுமா? பூக்களின் மருத்துவக் குணங்கள்?"

Dear Reader,

Enter Your Comments Here...