வர்த்தக பயன்பாட்டிற்கு வாட்ஸ் அப்...புதிய திட்டம்
தவிர்க்க முடியாத சமூக வலை தளமாக வாட்ஸ் அப் மாறிவிட்டது. அதற்கு இதன் எளிமையான பயன்பாட்டு முறை தான் காரணம். வாட்ஸ்-அப் செயல்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வணிகர்கள், வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்புகொள்ள பிசினஸ் செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த செயலி துவங்கப்பட்டது. இந்தாண்டு, ஜனவரி முதல் செயல்பாட்டிற்கு வந்தது.

புக் மை ஷோ, கோட்டக் மஹிந்திரா, ரெட் பஸ் போன்ற நிறுவனங்கள் வாட்ஸ்- அப் பிஸினஸ் செயலி மூலம் வாடிக்கையாளர்களை நேரடியாக தொர்டு கொண்டு வருகின்றன. நிறுவனங்கள் மூலம் வருமானம் கிடைக்கும் வகையிலான தயாரிப்பு புதிய திட்டம் ஒன்றை வாட்ஸ் அப் வெளியிட உள்ளது.
2019-ம் ஆண்டு முதல் இந்த செயலி மேம்படுத்தப்படவுள்ளது. வாட்ஸ்- அப் ஸ்டேட்டஸில் நிறுனங்களின் விளம்பரங்களை புரொமோட் செய்ய வழிவகை செய்யப்படவுள்ளது. மேக் மை டிரிப் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கெட், பயண தகவல்கள் பகிர முடியும். வாடிக்கையாளர்களும் சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெளிவுபெற முடியும்.

Share this

0 Comment to "வர்த்தக பயன்பாட்டிற்கு வாட்ஸ் அப்...புதிய திட்டம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...