Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலைகள் பள்ளிகளில் கேள்விக்குறியான உளவியல் மையங்கள்: ஆலோசனை இல்லாமல் தடுமாறும் இளைய தலைமுறையினர்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு
ஏற்படும் மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக நடமாடும்  உளவியல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் உள்ள மனநல ஆலோசகர், தலைமை ஆசிரியர்களின் அழைப்பின் பேரிலும்,  வழக்கமான ஆய்வின் அடிப்படையிலும் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். 
தற்போதைய சூழலில்  மதிப்பெண் குறைவது, பெற்றோர், ஆசிரியர்கள் கண்டிப்பது போன்ற விஷயங்களுக்குகூட மாணவர்கள் அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் ஒரே வகுப்பை சேர்ந்த 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அவர்கள் சரியாக படிக்காததால் ஆசிரியர் கண்டித்ததுதான் காரணமாக கூறப்படுகிறது.  இதுபோல் கடந்த 2 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் மட்டும் 50க்கும் மேல் என்று  சொல்கின்றனர் சமூகவியாலாளர்கள்.
இதுதவிர மதிப்பெண் குறைதல், பெற்றோர் திட்டுதல், ஆசிரியர் திட்டுதல் என்று தன்னிலை சார்ந்த செயல்களில் குறைகளை ஏற்றுக் கொள்ள  முடியாமல் விபரீத முடிவுகளை இன்றைய மாணவ சமுதாயம் எடுக்கிறது. இது ஒருபுறம் என்றால் அவர்களின் வளரும் சூழலும் அவர்களின்  மனநலனை பாதிக்கிறது. திரைப்படங்களில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், மீடியாக்கள் என்று பல நிலைகளிலும்  மனநலன் பாதிக்கும் நிலையில் இன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையே நடைபெறும் மோதல்கள், கொலைகள், கொலை முயற்சி, ஆசிரியர்கள்  மீது தாக்குதல் போன்ற குற்றச்செயல்களும் ஆங்காங்கே நடந்து சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறையில் மனநல ஆலோசனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை  எழுந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 32  மாவட்டங்கள் உள்ள நிலையில் 10 நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்களே செயல்பட்டு  வருகின்றன. ஒரு மாவட்டத்தில் உள்ள மையம் மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று ஆலோசனை வழங்கி வருகிறது. இதன்  எண்ணிக்கையை மாவட்டத்துக்கு ஒன்று என 32 ஆக அதிகரிக்க நடவடிக்கை வேண்டும். அதில் நவீன மருத்துவக் கருவிகள் இடம்பெறாமல் உள்ளது.  மேலும் ஆண் ஆலோசகரிடம் மாணவிகள் தங்களது மனநலம் சார்ந்த பிரச்னைகளை தெரிவிக்க தயங்குகின்றனர். அனைத்து உளவியல் நடமாடும்  மைய வாகனங்களிலும் ஒரு ஆண், ஒரு பெண் ஆலோசகர்கள் இடம் பெற வைக்க வேண்டும் .
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தற்போது பள்ளி மாணவர்கள் எதற்கெடுத்தாலும் முன்கோபம் கொண்டு தவறான பாதைக்கு சென்றுவிடுகின்றனர்.  பெரும்பாலும் 9ம் வகுப்பு முதல்  பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களே மனநலன் சார்ந்த பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு கவனச் சிதறல்களை தவிர்த்து,  நினைவாற்றலை பெருக்குவதற்கு இந்த மனநல ஆலோசனை குழுக்கள் பெரிதும் உதவும். ஆனால் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.  சாரசரியாக ஒரு மாவட்டத்துக்கு ஒன்று என்ற முறையில் இருந்தால் சுழற்சி முறையில் ஒவ்வொரு பள்ளிக்கும் செல்லலாம். இதை கருத்தில் தமிழக  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive