பரிமாறிக்கொள்ளவேண்டும். அவர்களையும் வரம்பு மீற அனுமதித்துவிடக் கூடாது.
வலைத்தளத்தில் நீங்கள் பதிவிடும் பதிவுகளை வைத்தே உங்களின் மனநிலையை பிறர் கணித்துவிடக்கூடும். எனவே உங்கள் பதிவுகளின் மீது கவனம் செலுத்தி உங்கள் பலவீனம் வெளியா காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் சுயவிவரங்களை ஆயிரக்கணக்கான மக்கள் உலவும் வலைத்தளத்தில் தெரிவித்து உங்கள் தனிமைக்குள் அடுத்தவர் பிரவேசிக்க அனுமதிக்காதீர்கள்.
சைபர் கிரைம் குற்றங்கள் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் உங்கள் தகவல்களின் பாதுகாப்பு என்பது சமூக வலைத்தளங்களினால் கேள்விக்குறியாகி விட்டது என்பதை எப்பொழுதும் கவனத்தில் வைத்திடுங்கள்.
சில இளம்பெண்கள் ‘லைக்’குகளை குவிப்பதற்காக அரைகுறை ஆடைகளில் வீடியோக்களில் தோன்றுகின்றனர். இது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போன்றதாகும்.
சமூகவலைத்தளங்களில் உலவும் பெண்கள் தங்கள் பாதுகாப்பே முதன்மையானது என்பதை மறந்துவிடக்கூடாது. உங்கள் பாதுகாப்பிற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவமே உங்களை பிரச்சினைகளில் சிக்காமல் விழிப்புடன் வைத்திருக்கும்.
உங்களது பொருளாதார நிலை, குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள், குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள், உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைத்தளத்தில் ஒருபோதும் பதிவிடக்கூடாது.
தினமும் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் அதில் செலவிடுங்கள். அதிக நேரத்தை செலவிட்டு அதற்கு அடிமையாகிவிடாதீர்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...