Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழே.. தமிழே.. ,தமிழின் தலைமகனே! போய் வா..

தமிழே.. தமிழே.. 

போய் வா..
தமிழின் தலைமகனே..
உன்



காலம் முடிந்தது..
இது-

நர்சரிகளின் கலிகாலம்..
தமிழே நீ..
போய் வா..

இரைச்சல் ஏதுமின்றி..
உன்னோடு-

மெல்லத் தமிழ் இனி சாவும்..
ஏழைகள்

விதவைகள்

சிறுபான்மை சமூக மக்கள்

ஆசிரியர்கள்

அரசு ஊழியர்கள்

இலக்கியப் பதிப்பாளர்கள்

கதை சொல்லிகள்

எல்லோருக்கும்

இது

பேரிழப்பே..
போய் வா..

இரைச்சல் ஏதுமின்றி..

 சமூகநீதி பேச

சமத்துவம் பேச

இருந்த ஒரே

தலைவனும் நீ

மட்டும்தான்..
 பெரியாரின்

 பேரியக்கத்தின்

கடைசிதூணும்

நீ மட்டும் தான்* ..
உன்னோடு

அரசியல் செய்ய

இப்பொழுது

யாருக்கும்

தரம் இல்லை...
நீதான்

அழகு தமிழில்

எப்போதும்

பேசினாய்..

எமக்கும்

பேசக் கற்றுக் கொடுத்தாய்..
பேசுபவர்களைக் கவனிக்கக்

கற்றுக் கொடுத்தாய்..
ஊரெங்கும்

தமிழே பேராய்

அமைய

நீதான்

வழி வகை செய்தாய்..
உன்னோடு

அடங்கப் போகிறது

தமிழ் வழிக் கல்வி நிறுவனங்களும்..
இனி-

எவருண்டு

அதன் குறை கேட்க?
நீ..
போய் வா..
இரைச்சல் ஏதுமின்றி.
உன் மீது

விமர்சனங்கள் உண்டு..
உன்னோடு

முரண் தொடைகள் உண்டு..
ஆனாலும்..
நீ-

எழுதிய பல வார்த்தைகள்

தலைமுறை தாண்டியும் நிற்கும்..
உன்

நயம் கலந்த நகைச்சுவைகள்

எப்போதும்

எமைச் சிரிக்க வைக்கும்..
எமக்குத் தெரியும்..
உம்மை அடக்கமே செய்தாலும்

நீ எவருக்கும் அடங்காதவன்..
மெரினா கடற்கரையில்

ஓய்வெடு..
எதிரே

கோட்டையில் பறக்கும் மூவர்ணக் கொடி

எப்போதும்

உனக்கு வந்தனம் செய்யும்..
நீதானே..

கொடியேற்றும் உரிமையை

முதல்வருக்கும் பெற்றுத் தந்தாய்..
போய் வா..
தமிழின் தலைமகனே..

இரைச்சல் ஏதுமின்றி..
இனி

முதலாளித்துவம், பார்பனிய

ஆதிக்கம், சாதிய வன்முறை
தொடரட்டும் நீ
மீண்டும்
பிறக்கும்வரை......
 அ.சின்னராஜ், தேனி





2 Comments:

  1. காலங்கள் உள்ளவரையில் வரலாறு பேசும் உங்களை உதயசூரியன் அஸ்தமித்துவிட்டது

    ReplyDelete
  2. சென்று வா மீண்டும் தமிழகம் உனக்காக தவமிருக்கும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive