தேசிய அளவில் 45 விருதுகள் மட்டுமே வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு
இதுவரை தமிழகத்துக்கு 23 விருதுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இனி 3 விருதுகளுக்கு மட்டுமே வாய்ப்பு.
இதுவரை தமிழகத்துக்கு 23 விருதுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இனி 3 விருதுகளுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்குவதில், புதிய கட்டுப்பாடுகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் இல்லாவிட்டால் விருது கிடையாது, சி.பி.எஸ்.இ., தவிர, மற்ற தனியார் பள்ளிகளுக்கும் விருது இல்லை என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இந்த ஆண்டு, தேசிய விருது பெறும் நடைமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் மட்டும், விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழக பாடத்திட்டத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் விண்ணப்பிக்க முடியாது. விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் வகுப்புகளுக்கு ஒருநாள் கூட தவறாமல் சென்றிருக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் தவறாமல் பங்கேற்றிருக்க வேண்டும். டியூஷன் என்ற, வணிக ரீதியான கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கக் கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...