பெண் கல்வியை வலியுறுத்தியவர் கஸ்தூர்பா காந்தி: ஆளுநர் புகழாரம்

படிக்காதபோதும், பெண் கல்வியின்
முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்காக இயக்கங்களை நடத்தியவர் கஸ்தூர்பா காந்தி என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.
கஸ்தூர்பா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எஸ்.ஆர்.எஸ். சர்வோதயா மகளிர் விடுதி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
இதில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சமூக சேவை மற்றும் மக்கள் பணிகளில் சிறந்து விளங்கிய பல்வேறு நபர்களுக்கு சர்வோதயா ஸ்ரீ சக்தி ஒத்திசைவு மற்றும் அதிகாரமளிப்பு விருதுகளை வழங்கினார்.
தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.ஜோதி ஜெகராஜன், ஐஏஎஸ் அதிகாரிகள் ஜே.குமரகுருபரன், எம்.எஸ்.சண்முகம், சமூக சேவகர்கள் நிவேதா முத்துகுமார், சரோஜினி ராஜசேகர் உள்பட 14 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.


Share this

0 Comment to "பெண் கல்வியை வலியுறுத்தியவர் கஸ்தூர்பா காந்தி: ஆளுநர் புகழாரம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...