பெங்களூரு: பிரதமர் மோடி, நேற்று மன் கி பாத்
நிகழ்ச்சியின் போது பேசுகையில் அவருடன் பெங்களூருவை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி சமஸ்கிருத மொழியில் பேசி தேசிய அளவில் புகழ் பெற்றுள்ளார்.
தெற்கு பெங்களூருவில் கிரிநகர் என்ற பகுதியில் வசிப்பவர் லட்சுமி நாராயணன். அவரது மனைவி ஸ்ரீவித்யா. இவர்களது மகள் சின்மயி.. 10ம் வகுப்பு மாணவி. நேற்று, பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். இது நாடு முழுவதும் ரேடியாவில் ஒலிபரப்பானது.
இந்த நிகழ்ச்சியின் போது பிரதமருடன் போனில் பேசலாம். இதற்கான கட்டணமில்லா போன் எண்ணை தொடர்பு கொள்ள லட்சுமி நாராயணன், தொடர்ந்து முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் போன் இணைப்பு கிடைத்தது. உடனே போனை சின்மயிடம் கொடுத்து விட்டார்.
வாழ்வின் சிறந்த நாள்
அப்போது, உலக சமஸ்கிருத நாள் குறித்து மோடி பேசிக் கொண்டு இருந்தார். அவரிடம் சமஸ்கிருத மொழியில் பேசி கேள்வி கேட்டார் சின்மையி. இது தேசிய அளவில் பிரபலமானது. இது குறித்து சின்மையிடம் கேட்ட போது,' பிரதமருடன் பேசுகிறேன் என்பது உற்சாகமாகவும், பதட்டமாகவும் இருந்தது. முடிவில் எனது வாழ்வின் மிக சிறந்த நாளாக அமைந்தது' என்றார்.
சின்மயின் பெற்றோர் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர்கள். எனவே, சின்மயின் தாய் மொழியாக சமஸ்கிருதம் அமைந்து விட்டது என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...