வருகிற 2020ம் ஆண்டு முதல்
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வர சி.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது.
மாணவர்கள் பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து பதில் எழுதுவதை தவிர்க்கவும், அவர்களின் பகுத்தாய்வு திறனை சோதிக்கும் வகையிலும் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலான கேள்விகளும், 1 முதல் 5 மதிப்பிலான கேள்விகள் மட்டுமே அதிகம் கேட்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த எணிக்கையிலானா மாணவர்கள் படிக்கும் தொழில் முறை பாடங்களுக்கு பிப்ரவரி மாதமே தேர்வு நடத்தவும், மேலும் மற்ற முக்கிய பாடங்களுக்கு மார்ச் மாதம் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், தேர்வுத் தாள்களை திருத்தி மதிப்பிட கூடுதல் அவகாசம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம், முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிடமுடியும் எனவும் கூறுகின்றனர். இந்த பரிந்துரைகள் மீது ஆலோசனை நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments