NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC : GROUP II - 2018 கவனத்தில் கொள்ள வேண்டியவை!

GROUP 2 2018 – கவனத்தில் கொள்ள வேண்டியவை

• இருப்பது  92 நாட்களே... கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்... கண்டிப்பாக முதல்நிலை தேர்வில் வெற்றி பெறும்படி இந்த நாட்களில் தயார் ஆவது மிக எளிது.
• மொத்த காலிப்பணியிடங்கள் 1199 என்பதால் சுமார் 12000 பேர் மட்டுமே மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்
• தோரயமாக
பொதுப்பிரிவினர்—372
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -318
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்- 240
தாழத்தபட்டோர் -180
முஸ்லிம் -42
அருந்ததியினர் -35
பழங்குடியினர் -12
பேருக்கு பணி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.... இறுதி மதிப்பெண் பட்டியலில் உங்கள் தரவரிசை  உங்கள் இட ஒதுக்கீடு படி இதற்குள் இருந்தால் உங்கள் பணி உறுதி..
• சமீப காலமாக போட்டி அதிகம் என்பதால் முதல்நிலைத் தேர்வில் முதல் 12000 பேர் தர வரிசையில் குறைந்தது  158+ கேள்விகள் சரியாக பதில் அளித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.. கேள்வி எளிது என்றால் இன்னும் அதிகமாக பதில் அளிக்க வேண்டும்.. கடினம் என்றால குறைய வாய்ப்பு இருக்கிறது..
• புதிய புத்தகத்தில் தேவையானதை மட்டும் படித்து மற்றவற்றை புறந்தள்ளி விடலாம்
• முக்கியமாக மொழிப்பாடம்+கணிதம்+நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்..ஏனெனில் முதல்நிலை மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ள போவதில்லை
• அதிகமாக பழைய மற்றும் மாதிரி வினாத் தாள்களை பயிற்சி செய்யுங்கள்
• நகராட்சி ஆணையாளர்,சார் பதிவாளர்  போன்ற பசையுள்ள பதவிகள் வந்து இருப்பதால் ஏற்கனவே குருப் 2ல் பணி புரிபவர்கள் போட்டியிட்டு போட்டியை அதிகப்படுத்த வாய்ப்புண்டு.. எனவே போட்டியோ போட்டி..போட்டிக்கு எல்லாம் போட்டி தான் இந்த தேர்வு.. மனதில் வைத்துக் கொள்ளவும்
• விண்ணப்பதை பிழை இல்லாமல் விண்ணப்பிக்கவும்
• இந்த அறிவிக்கை க்கு பிறகு குருப் நான்கு,குருப் 2A போன்ற அறிவிக்கை வர குறைந்தது பத்து மாதங்கள் ஆகலாம்..அல்லது ஒரு வருடம் மேலே ஆகலாம்... எனவே இந்த வாய்ப்பை தவறவிட்டால் நீங்கள் வாழ்க்கையை வெறுக்க வேண்டிய சூழ்நிலை வரும்...
• மெயின் தேர்வு கண்டிப்பாக இருப்பதால்  நீங்கள் படிக் வேண்டியதும் எழுதி பழக வேண்டியதும் கடல் அளவு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்...
By
V Siva Anantha Krishnan
Duty Officer
All India Radio
Tirunelveli




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive