மேஷம்
இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன்
கவனமாக பேசுவது நல்லது. கணவன்,
மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின்
கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை
தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சக ஊழியர்களிடம் சுமுகமாக
அனுசரித்துபோவது நல்லது. குடும்ப கவலை தீரும்.
மிதுனம்
இன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம்
ஏற்படும். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். சந்திரன் சஞ்சாரம்
மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும்.
கடகம்
இன்று வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம். காரிய வெற்றி தரும்.
மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தொழில் வியாபாரத்தில்
ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும்.
கன்னி இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
துலாம் இன்று சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் பணிகளில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம் இன்று விருப்பங்கள் கைகூடும். சந்திரன் சஞ்சாரத்தால் பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பணவரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
தனுசு இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.
மகரம் இன்று குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.
கும்பம் இன்று திறமையுடன் காரியங்களை செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும்.
மீனம் இன்று எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...