மேஷம்
இன்று தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன்
இருந்த மனக்கசப்பு நீங்கி
உற்சாகம் துளிர்விடும். எவருக்காகவும் பரிந்து பேசுவதோ ஜாமின் கையெழுத்து
போடுவதோ கூடவே கூடாது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம் வைக்கும் போது
கவனமாக இருக்கவும். அவர்களை நம்பி எந்த பெரிய முடிவும் எடுக்க கூடாது.
கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
ரிஷபம்
இன்று பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை செய்யாதீர்கள். ஆடம்பர
பொருட்கள் வாங்குவதை சில நாட்கள் தள்ளி போடவும். பொது இடத்தில்
மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கவும்.
வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீர்நிலைகளில் செல்லும்போதும் கவனம்
தேவை. எதிலும் யோசித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மிதுனம்
இன்று நீங்கள் நல்லது சொன்னாலும், செய்தாலும் விமர்சனம்
செய்யப்படலாம். கவனம். நீங்கள் யாருக்கெல்லாம் நல்லது செய்தீர்களோ
அவர்களில் சிலர் அதையெல்லாம் மறந்து விட்டு சண்டையிடலாம். யாரிடமும்
அளவாகப் பழகுங்கள். ஆடை அணிகலன்கள் சேரும். விஐபிக்களின் நட்பு கிடைக்கும்.
அரசாங்க அனுகூல்யம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
கடகம்
இன்று சிலர் உங்களை பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம். கடன் வாங்குவதையோ
மற்றும் கொடுப்பதையோ தவிர்க்கவும். வெளிநாட்டு தொடர்புகள் அதிகரிக்கும்.
வெளிநாடு மற்றும் வெளியூர் செல்ல நேரிடலாம். குடும்ப ரகசியங்களை வெளியில்
விவாதிக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையை சந்தேகப்படும் அளவுக்கு உங்களது
நடவடிக்கைகள் இருக்காவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
சிம்மம்
இன்று வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெற பல பேரிடம் ஆலோசனைகளை
கேளுங்கள். அதன்பின் முடிவெடுங்கள். பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்தோரின்
தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். வியாபாரத்தில்
அதிரடியாக புதிய வியூகங்களை அமைப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் சுமூக
உறவு இருக்கும். உண்மையான நன்பர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கன்னி
இன்று சிறுசிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக்
கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே மருத்துவரை
அணுகவும். குடுமப வாழ்வில் பொறுமை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
துலாம்
இன்று எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே
கூடாது. வியாபார ரீதியாக போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைபளு
அதிகரிக்கும். வம்பு வழக்கு கூடவே கூடாது. மனக்குழப்பம் ஏற்பட்டால்
அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
விருச்சிகம்
இன்று பெற்றோரது ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டடரத்தில் மதிப்பு,
மரியாதை உயரும். எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம்
செய்ய வேண்டாம். அரசு விஷயாதிகளில் நிதானத்தையும், பொறுமையையும்
கடைபிடிக்கவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
பிரியமானவர்களிடம் அடிக்கடி உரையாடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
தனுசு
இன்று சொத்து சிக்கல்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். தாய்
மற்றும் தாய் வழி உறவினர்களிடம் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு சரியாகும்.
அலைச்சகள் நிறைந்த பயணங்கள் நிரம்ப இருக்கும். பணத்தட்டுப்பாடு குறையும்.
தியானம் யோகா போன்றவற்றில் மனம் செலுத்துங்கள். முடிந்த வரை இரவு நேர
பயணங்களை தவிருங்கள். தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் முடிவடையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
மகரம்
இன்று சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் மற்றும்
உத்தியோகத்தில் சந்தர்பம் அறிந்து செயல்படுங்கள். கொடுக்கலில் வாங்கலில்
கவனம் தேவை. கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே கூடாது. பங்குதாரர்களை
அனுசரித்து போகவும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனைகள் பெற்று
காரியங்களில் இறங்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 9
கும்பம்
இன்று சம்பளம் உயரும். இடமாறுதல் கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில்
மூக்கை நுழைக்காதீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சுபச்செலவுகள்
இருக்கும். குழந்ததயில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். வீடு, வாகனம்,
மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 6
மீனம்
இன்று மேற்படிப்பு விஷயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனமாக
செயல்படவும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மாணவமணிகளுக்கு உயர்கல்வி கிடைக்கும். நினைத்த மதிப்பெண்களை கொஞ்சம்
முயற்சி செய்தால் அள்ளலாம். கலைஞர்கள் விருதுகள் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1,2
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...