NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB - சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

தேர்வு வாரியம் மூலம் தேர்வாகும்
சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட இருக்கிற சிறப் பாசிரியர்களுக்கு ஆசிரியர் தின மான செப்டம்பர் 5-ம் தேதி பணி நியமன ஆணை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்உறுதியளித் துள்ளார். தமிழகத்தில் இதுவரையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெற்று வந்த தையல், ஓவியம், உடற் கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பணிநியமனம் தற்போது முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் போட்டித்தேர்வு மூலமாக மேற்கொள்ளப்பட இருக்கிறது.
 அந்த வகையில், அரசு பள்ளி களில்1,325 சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி நடத்தப்பட்டது. அத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். எழுத்துத்தேர்வு முடிவுகள் ஜூலை 27-ம் தேதி வெளியிடப் பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2,846 பேர் தகுதிபெற்றனர். அவர் களுக்கு கடந்த 13-ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் சான்றி தழ் சரிபார்ப்பு நடந்தது. அப் போது கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவைசரிபார்க் கப்பட்டு வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கு ஏற்ப உரிய மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. உரிய கல்வித்தகுதி இல்லாமல்விண்ணப்பித்தவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்துகொண்ட சுமார் 200 தேர்வர்கள் சனிக்கிழமை கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையனை அவரது இல்லத் தில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். சிறப்பாசிரியர் தேர் வுப் பட்டியலை விரைவாகவெளி யிட வேண்டும் என்றும் நடப்பு கல்வி ஆண்டு வரையிலான காலி யிடங்களை சேர்த்து கூடுதல் சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும் என்றும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஓவிய ஆசிரியர் தமயேந்தி வரைந்தஅமைச்சர் செங்கோட்டையனின் உருவப்படத்தை அவருக்கு நினை வுப்பரிசாக வழங்கிய தேர்வர்கள், கேரள வெள்ள நிவாரண நிதி யாக ரூ.31 ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினர்.
அமைச்சரை சந்தித்து வந்த தேர்வர்கள் கூறுகையில், சிறப் பாசிரியர் தேர்வுப்பட்டியல் தயாரிப் புப் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடை பெற்று வருவதாகவும், தேர்வுபட்டி யலை விரைந்து வெளியிட்டு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதி அன்று பணிநியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச் சர் உறுதியளித்ததாகவும் தெரிவித் தனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையின்படி, சிறப்பாசிரியர் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளி யிடப்பட்டிருக்க வேண்டும். தேர்வுக் கான அறிவிப்பு வெளியிட்டு ஓராண் டுக்கு மேல் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








1 Comments:

  1. I am attend the drawing exam,and interview
    My mark 56+5 (sc).any chance.
    Plz reply sir.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive