பல்கலைக்கழக வளாகங்களுக்குள் ஜங்க் உணவு வகைகளுக்குத் தடை! - UGC

'நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழக
வளாகங்களுக்குள் ஜங்க் (junk) உணவுகளைத் தடைசெய்யவேண்டும்' என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு யூ.ஜி.சி-யிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'பல்கலைக்கழகங்களில் ஜங்க் உணவுகளைத் தடைசெய்ய வேண்டும். இளம் மாணவர்களின் உடல் பருமனைக் குறைக்கும் வகையில் ஆரோக்கியமான உணவுகள் வழங்க வேண்டும். அதற்கான புதிய தரத்தைப் பின்பற்ற வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2016-ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்ட அறிவிப்பை தற்போது நினைவுபடுத்தும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது.

Share this