வருகிற நவம்பர் 24 ம் தேதி
புதுக்கோட்டையில் புத்தகத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 1999 பள்ளிகளைச் சேர்ந்த 2 லட்சத்து 70 ஆயிரம் மாணாக்கர்கள் ஒரே நேரத்தில் புத்தகங்களை வாசித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டையில் மூன்றாவது புத்தக கண்காட்சி வருகிற நவம்பர் 24 ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி முடிவடைகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்குபெற்று லட்சக்கணக்கான புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளனர்.இதனிடையே புத்தக வாசிப்புகுறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு மணி நேரம் மட்டும் அனைத்து பள்ளி மாணவர்களும் தங்கள் பள்ளியில் உள்ள நூலகத்திற்கு சென்று பாடப்புத்தகம் அல்லாத மாற்று புத்தகங்களை வாசிக்க மாவட்ட கல்வித்துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1999 பள்ளிகளை சேர்ந்த 2 லட்சத்து70 ஆயிரம் மாணவ, மாணவிகள் நேற்று (புதன்) மதியம் 11 .30 மணி முதல்12. 30 மணி வரை தங்கள்பள்ளியில் உள்ள நூலகத்திற்குசென்று புத்தகங்களை வாசித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...