பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய பள்ளி மற்றும் பராமரிப்பு மானியம் உடனடியாக வழங்க கோரிக்கை

நிதியில்லாமல் அரசு பள்ளிகள் தவித்து
வருகின்றன. இந்த நிதியை பள்ளிகளுக்கு உடனே வழங்க வேண்டும் என தலைமையாசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடந்தது. மாநில சட்ட செயலாளர் அனந்தராமன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் பாலசுப்பிரமணி, மாநில துணைத்தலைவர் நாகசுப்பிரமணி, மாவட்ட துணை தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், கள்ளர் பள்ளி தலைவர் சின்னபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி, அனைவரும் கல்வி திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு மானியம் ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

Share this