600 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில், 2012ல், தற்காலிக பகுதி நேர

ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் சிலர், சமீபத்தில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், மாவட்ட வாரியாக, பகுதி நேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காஞ்சிபுரத்தில், 600 ஆசிரியர்களுக்கு, 19ம் தேதியிலிருந்து, சரிபார்ப்பு பணி துவங்கியுள்ளது. 

இதுவரை, 200 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில், வரும், 24க்குள் அனைவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும் என, கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்

Share this

1 Response to "600 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு"

Dear Reader,

Enter Your Comments Here...