ஜனவரி முதல், LKG துவக்கம்

தமிழகம் முழுவதும், இந்தாண்டு முதல் அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெருநகர் அரசு மேல்நிலை பள்ளியில், கடந்த அக்டோபர் மாதம் விஜயதசமி நாளில், எல்.கே.ஜி., வகுப்புக்கான சேர்க்கை நடைபெற்றது அப்போது, சுற்றியுள்ள கிராமப்புறங்களை சேர்ந்த, 38 பிள்ளைகளை, எல்.கே.ஜி., வகுப்பில் பெற்றோர் சேர்த்தனர் இக்குழந்தைகளுக்கான வகுப்புகள், ஜனவரி மாதம் துவங்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
சகல வசதிகள் கொண்ட வகுப்பறையாக அமைக்க வேண்டும் என்பதற்காக, நவம்பர், டிசம்பரில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, ஜனவரியில், எல்.கே.ஜி.,வகுப்புகள் துவங்கவுள்ளன

Share this

1 Response to "ஜனவரி முதல், LKG துவக்கம்"

  1. கல்வி தரம் உயர்ந்தால் மகிழ்ச்சி
    ஏழையின் சிரிப்பில்"இறைவனை காணலாம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...