பகுதிநேர B.E படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி:அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்புபகுதி நேர பி.இ. படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி நாளாகும்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் இந்த பகுதி நேர பி.இ. படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஏற்கெனவே பணியில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் இயந்திரவியல், கட்டடவியல், மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல், மின்னணுவியல் உபகரணப் பொறியியல் ஆகியப் பிரிவுகளின் இந்த பகுதி நேரப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் டிப்ளமோ முடித்திருப்பதுடன், குறிப்பிட்ட கல்லூரிகளிலிருந்து 120 கி.மீ. தொலைவில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
வகுப்புகள் தினமும் மாலை 6.15 மணிக்குத் தொடங்கி இரவு 9.15 மணி வரை நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 30 -ஆம் தேதி கடைசி நாளாகும்

Share this