பொறியியல் படிக்கும் இளைஞர்களுக்கு பாடம்
நடத்தி வரும் ஆச்சரியகரமான சம்பவம் ஐதராபாத்தில் நடக்கிறது.


ஐதராபாத்தை சேர்ந்தவர் மாணவர் முஹமத் ஹசன் அலி, 7ஆம் வகுப்பு மாணவர். இவருக்கு 11 வயதாகிறது.


ஆனால் இவர் தற்போது பொறியியல் கட்டிடக்கலை (இஞ்சினியரிங் சிவில் ) படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார்.


மேலும் எலக்ட்ரிகல் அண்டு மெகானிக்கல் படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்பு எடுக்கிறார்.இவரிடம் சுமார் 30 பொறியியல் மாணவர்கள் டியூசன் படிக்கிறார்கள்.

சிறுவர் பருவத்திலேயே பட்டப்படிப்பு தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு இவர் எந்தவித தொகையையும் பெறுவதில்லை.

இலவசமாகவே கற்பிக்கிறார்.


இது குறித்து ஹசன், "கடந்த ஒரு வருடமாக பொறியியல் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறேன்.


 நாள்தோறும் காலையில் பள்ளிக்குச் சென்று மாலை 3 மணிக்கு திரும்புவேன். அதன் பிறகு விளையாடுவேன் வீட்டுப் பாடங்களை படித்து முடிப்பேன். அதன் பிறகு பயிற்சி மையத்திற்கு சென்று பொறியியல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவேன். என்னிடம் சிவில், எலக்ட்ரிகல், மெக்கானிகல் என பலதுறை பொறியியல் மாணவர்கள் படிக்கிறார்கள்.


 அவர்களுக்கு தேவையான பாடங்களை இண்டர்நெட் மூலம் நானே தெரிந்து கொண்டு அவர்களுக்கு நடத்துவேன். இதற்காக நான் எந்தவித கட்டணமும் பெறுவதில்லை. என் பிறந்த நாட்டுக்கு எதாவது செய்ய விரும்புகிறேன்" என்கிறார்.


இவரிடம் படிக்கும் மாணவர்கள் "எங்கள் ஆசிரியர் ஹசன் சிறப்பாக சொல்லித்தருகிறார். இதனால் நாங்கள் நன்றாக படிக்கறோம்" என்கிறார்கள்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments