ஒருங்கிணைந்த பள்ளி திட்டம் சார்பில், 'ஊட்டச்சத்து சுகாதாரம், செயல்படுத்துதல்' என்ற திட்டம் மாணவியர் பயிலும், 5,711 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பள்ளிகளை சேர்ந்த, 360 ஆசிரியர்களுக்கு, வரும், 19 முதல், 30 வரை நான்கு கட்டங்களாக, எட்டு பயிற்சிகள், சென்னையில் அளிக்கப்படுகின்றன. இதில், உடல்நலம், சரிவிகித சத்தான உணவு, சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி முடித்த ஆசிரியர்கள், தங்கள் கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவியருக்கு, ஊட்டச்சத்து பயிற்சி அளிப்பர். இதில் பங்கேற்க, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, ஒரு கல்வி மாவட்டத்துக்கு, மூன்று பேர் என, ஒன்பது பெண் பட்டதாரி ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments