(S.Harinarayanan, GHSS Thachampet
Tiruvannamalai district )
அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்
(Unidentified Flying Objects -UFO)
அடையாளம்
தெரியாத பறக்கும் பொருட்கள் UFO எனப்படுகின்றது. வானில் திடீரென தோன்றும்
பறக்கும் பொருட்கள் தனியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு
திடீரென தோன்றும் UFOக்கள் வேற்றுக்கிரகத்தில் வசிப்பவர்கள் பூமிக்கு
வந்து செல்ல உபயோகிக்கும் பறக்கும் தட்டுகள் என்றே நம்பப்படுகின்றது.
பறக்கும்
தட்டுக்கள், அயல் கிரகவாசிகளின் வருகை போன்றவை நிஜம்தானா அல்லது
பார்த்ததாகக் கூறுபவர்களின் கற்பனையா என்று இன்னமும் அறுதியிட்டுத்
தீர்க்கமாகக் கூற முடியவில்லை- இது போல் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத,
ஆராய்ச்சியினாலும் உறுதி செய்யப்படமுடியாத அன்னியத் தோற்றங்களை UFO (
Unidentified Flying Objects) என்று சொல்கிறார்கள் இப்படிப்பட்ட அபூர்வமான
பொருட்கள் ஆங்காங்கே காட்சியளிப்பதாக பன்னெடுங்காலங்களாக செய்திகள்
பரவிவந்தாலும் 1947ம் ஆண்டுக்குப் பிறகுதான் இதைப்பற்றிய அதிகமான செய்திகள்
உலகின் பார்வைக்கு வரத் துவங்கின.
விண்ணில்
பறக்கும் தட்டுக்கள் போன்ற விண்வெளி வாகனங்கள் அதிவேகமாக பறப்பதாகக்
கூறப்படுகின்றது. அதில் வேற்றுகிரகவாசிகள் பயணிப்பதாகவும் சிலர்
நம்புகின்றனர்.
UFO தினம்:
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ம் தேதி உலக அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தினம் 2001 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
1947
ஜூலை 2 ல் ரோஸ்வெல்லின் அடையாளம் தெரியாத பொருள் விபத்து நடந்ததின்
நினைவாக இந்த தினம் அதிகாரப்பூர்வமாக உலக அளவில் கடைபிடிக்கப்படுகிறது.
வேற்றுகிரக
வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை
போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில்
இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று
கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம்
என்றே பதில் கூறுகிறார்கள்.
இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சிக்னல்களை கண்டறிந்து உள்ளனர்.
வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வுகள்
குறித்து
விசாரிக்க பல மில்லியன் டாலர் செலவிலான ரகசிய திட்டத்தை 'பென்டகன்' நடத்தி
வந்ததாக அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த
2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டம் 2012 ஆம் ஆண்டு முடிவுக்கு
வந்ததாம். இதுகுறித்து ஒருசில அதிகாரிகள் மட்டுமே அறிந்திருந்தனர் என்றும்
தகவல் வெளியாகி உள்ளது.
விசித்திரமான
அதிவேக விமானங்கள் பறப்பது மற்றும் விண்ணில் சில பொருட்கள் நகர்வதை
இத்திட்டத்தின் ஆவணங்கள் விவரிப்பதாக சர்வதேச பத்திரிகை ஒன்று
குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து
விளக்கம் அளிக்கும் விஞ்ஞானிகள், இது மாதிரியான விவரிக்க முடியாத சில
சம்பவங்கள், வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்க வேண்டிய
அவசியமில்லை என கூறுகின்றனர்.
இந்த
ஆய்வை முன் நின்று நடத்தியுள்ள ஓய்வுபெற்ற ஜனநாயக கட்சி செனட்டர் ஹேரி
ரீட், "நான் இத்திட்டத்தை நடத்தியதற்கு சங்கடமோ அல்லது வெட்கமோ படவில்லை.
இதற்கு முன் யாரும் செய்யாததை நான் செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக
இந்த ஆண்டில், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு, லட்சக்கணக்கான ஆவணங்களை
இணையத்தில் வெளியிட்டது. விண்ணில், அடையாளம் தெரியாத பொருட்கள் மற்றும்
பறக்கும் வட்டத்தட்டுகளை கண்டது குறித்த ஆவணங்களும் இதில் அடங்கும்.
விரைவு
ரேடியோ வெடிப்புகள் (Fast radio bursts) முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு
வேற்று கிரகவாசிகளின் சமிக்ஞையை பதிவு செய்தது.ராயல் வானியல் கழகத்தின்
மாதாந்திர அறிக்கையில் 4 புதிய சமிக்ஞைகள் ஆராய்ச்சிக்காக எடுத்து
கொள்ளப்பட்டு உள்ளன என கூறபட்டு உள்ளது.
இது குறித்து அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்து ஆராய்ச்சி செய்துவரும் நிகல் வாட்சன் கூறும் போது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...