விளாத்திகுளம் அருகே
வி.வேடப்பட்டி புனித பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில், இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.


தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் இணைந்து 26வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தின. இதில் வி.வேடபட்டி புனித பால்ஸ் உயர்நிலைப்பள்ளி சார்பில் 9ம் வகுப்பு மாணவிகள் அங்கயற்கண்ணி மற்றும் சங்கரி பங்கேற்று ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தனர். இதில் மாணவிகள் அங்கயற்கண்ணி மற்றும் சங்கரி இருவருக்கும் இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது. இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் மேகராஜன், அறிவியல் ஆசிரியர் செந்தில்மகேஷ், பள்ளி நிர்வாகியும், தமிழ் கல்வி நிறுவன இயக்குனருமான அழகுமணிகண்டன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments