திருவண்ணாமலை மாவட்டம்,
செங்கம் வட்டம், செங்கம் பேரூராட்சியில் உள்ள ராஜ வீதியை சேர்ந்தவர் ஆஜாநடேஷ் - அம்பிகா தம்பதி. இந்த தம்பதிக்கு 7 வயதில் பிரசன்னா என்ற மகனும், 5 வயதான லிஜாஅனுஷ்கா என இரண்டு குழந்தைகள். இருவரும் செங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு மற்றும் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இதில், லிஜாஅனுஸ்கா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு எழுதிய கடிதத்தில், அய்யா, நாங்கள் இருவரும் மேற்கண்ட விலாசத்தில் நிரந்தரமாக தங்கி செங்கம் டவுன் அம்ரிஷ் பள்ளியில் பிரசன்னா 3 ஆம் வகுப்பிலும், லிஜா அனுஷ்கா 1 ஆம் வகுப்பிலும் படித்து வருகிறோம். நாங்கள் இருவரும் தினமும் காலை செய்தி தாளிலும், டிவி சேனல்களிலும் உங்களை பார்க்கும் போது எனக்கும் அண்ணணுக்கும் ஐஏஎஸ் படிக்கனும் ஆசையாய் இருக்கு. தாங்கள் ஆரணி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு நேரில் சென்று தாய் தந்தையின்றி தனிமையிலும், வறுமையிலும் உண்ண உணவின்றி தவித்து வந்த குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியது மட்டுமின்றி அவர்களின் எதிர்காலம் கருதி அரசு வேலை, கல்லூரி படிப்பு செலவு மற்றும் இரு சக்கர சைக்கிள் தந்து உதவியது கண்டு நாங்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளோம். தாங்களை போன்று எதிர் காலங்களில் நன்றாக படித்து எங்களை போல் உள்ள ஏழை மக்களுக்கும், மாணவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஆகவே நாங்கள் இருவரும் தங்களை நேரில் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறோம். வரும் 31.10.2018 அன்று லிஜா அனுஷ்கா என்னுடைய பிறந்த நாள் அன்று உங்களை நேரில் சந்தித்து ஆசி பெற மிகவும் ஆவலாக உள்ளோம். தாங்கள் எங்களுக்கு ஆசீர்வாதம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையிலும் எதிர்பார்பிலும் நாங்கள் இருவரும் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறோம் என்று எழுதியிருந்தனர். அந்த கடிதத்துடன் லிஜா அனுஷ்கா, மழை நீர் சேகரிப்பு மற்றும் தேசிய பறவை குறித்து வரைந்திருந்த ஓவியங்களையும் அனுப்பி வைத்திருந்தார்.
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கடிதத்தை படித்தவுடன் உடனடியாக அக்குழந்தைகளை சந்திக்க நேரம் ஒதுக்கிய தகவலை கடிதம் வாயிலாக தெரிவித்தார். அந்த கடிதத்தில், அன்புள்ள பிரசன்னா மற்றும் லிஷா அனுஷ்கா, 13.10.2018 நாளிட்ட தங்களின் கடிதத்தை படித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் தினந்தோறும் செய்திதாள் மற்றும் தொலைக்காட்சியில் என்னை பற்றி வரும் செய்திகளின் காரணமாக நீங்கள் இருவரும் ஐஏஎஸ் படித்து ஏழை எளியவர்களுக்கு உதவும் எண்ணம் ஏற்பட நான் தூண்டுதலாக உள்ளதாக தெரிவித்துள்ளதற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன் தங்கள் கனவுகள் மெய்பட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இருவரையும் 30.10.2018 அன்று காலை 10.30 மு.ப. மணிக்கு சந்திக்க விருப்பமாக உள்ளேன் என எழுதியிருந்தார்.
ஆவலுடன் அக்குழந்தைகள் அந்த நாளுக்காக காத்திருந்தனர். ஆனால் எதிர்ப்பார்ப்பு பொய்யானது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சென்னையில் அலுவல் சார்ந்த கூட்டத்திற்கு சென்றிருந்ததால் சந்திக்க முடியவில்லை. இதனால் இன்று 31.10.2018 பிரசன்னா, லிஜா அனுஷ்கா இருவரையும் தனது அலுவலத்திற்கு வரவைத்து சந்தன மாலை அணிவித்து, பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தலைப்பைப் சரி பார்க்கவும்
ReplyDeleteஜ.ஏ.எஸ்.ஆகனும் என்று மாற்றவும்.
ReplyDeleteஆகனும் என்று குறிப்பிடவும்.. நன்றி...
ReplyDeleteஐ.ஏ.எஸ் ஆகனும் என்று மாற்றவும்.
ReplyDelete