தனியார் பள்ளி மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்களே சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்! ஆய்வு தகவல்தனியார் பள்ளி மாணவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளை விட அரசு பள்ளி மாணவர்கள் எடுக்கும் உணவே சத்தானது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில், சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சி மையம் (Council of Research on International Economic Relations - ICRIER) பள்ளி மாணவர்கள் உண்ணும் பழங்கள், காய்கறிகள், மற்றும் பழச்சாறுகள் அருந்துவது X, தனியார் பள்ளி குழந்தைகளை விட சத்தான உணவுகளையே எடுத்துக் கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள் தினமும் தங்களது உணவில் 250 கிராம் காய்கறிகளை எடுத்துக் கொள்கிறார்கள். இதுவே, தனியார் பள்ளி மாணவர்கள் எடுத்துக்கொள்ளும் காய்கறியின் அளவு 210 கிராம் ஆகும், என ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாளைக்கு, சுமார் 300 கிராம் அளவு காய்கறிகளை ஒருவர் உண்ண வேண்டும். இதில், 50 கிராம் கீரை வகைகளும், 200 கிராம் கிழங்கு போன்ற பிற காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று, ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவுறுத்துகிறது.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் YG டியோஸ்தலே கூறுகையில், பள்ளி குழந்தைகளுக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படும். ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் படிப்பில் கவனம் செல்லாது. எனவே, மாணவர்கள் தினமும் உட்கொள்ளும் உணவில் போதுமான அளவு காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ஆனால், தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களைவிட அதிக அளவில் பழங்கள் எடுத்துக் கொள்வதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வின் படி, 34 சதவீத தனியார் பள்ளி மாணவர்கள் பழங்கள் உண்ணுவதாகவும், வெறும் 25 சதவீத அரசு பள்ளி மாணவர்களே பழங்களை எடுத்துக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Share this

0 Comment to "தனியார் பள்ளி மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்களே சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்! ஆய்வு தகவல் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...