Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

குரூப் 2 முதன்மைத் தேர்வு எழுதும் தேர்வர்கள்
கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே சான்றிதழ்களை பதிவேற்றவும் கடைசி வாய்ப்பாகும். இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் 2-இல் அடங்கிய பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிந்த நிலையில், முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 10-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்பாக அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், முதல் நிலை எழுத்துத் தேர்வுக்குக் கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான கட்டணமான ரூ.150-ஐ தேர்வாணைய இணையத்தில் (‌w‌w‌w.‌t‌n‌p‌s​c‌e‌x​a‌m‌s.‌n‌e‌t)  மட்டுமே வரும் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் தேர்வர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive