சென்னை, 'கடந்த, 2018 - 19ம்
நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான, அனைத்து விண்ணப்பங்களும், இணையதளத்தில் கிடைக்கின்றன' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2018 - 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல், ஏப்., 1 முதல் துவங்கியது. தற்போது, கணக்கு தாக்கல் செய்வதற்கான, ஒன்று முதல், ஏழு வரையிலான விண்ணப்பங்கள், இணையதளத்தில் கிடைக்கின்றன.இதுவரை, விண்ணப்பம், 1 மற்றும், 4 ஆகியவை மட்டுமே, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல், வருவாய் ஈட்டுவோர் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும், 60 முதல், 80 வயது உள்ள அனைத்து மூத்த குடிமக்களும், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

Blog Archive

Recent Comments