திருச்சி, தமிழகத்தில் உள்ள
மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், பள்ளிக்கல்வி துறை செயலர், திருச்சியில் ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில், ஏதேனும் ஓர் அரசு பள்ளியை தேர்வு செய்து, 50 லட்சம் ரூபாய் செலவில், மாதிரி பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.தகுதி வாய்ந்த சிறப்பான ஆசிரியர்கள், வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட மாதிரி பள்ளிகளிள், தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம், திருச்சியில் நேற்று நடந்தது.பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், இயக்குனர் முருகன் ஆகியோர், 32 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாதிரி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினர்.மாதிரி பள்ளிகளின் செயல்பாடுகள், மாதிரி பள்ளிகளில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கேட்டறிந்தனர்.தொடர்ந்து, அடுத்த ஆண்டு, தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி,ஆலோசனை வழங்கினர்.

Blog Archive

Recent Comments