கல்லுாரி மாணவர் சேர்க்கை பிளஸ் 1 தேர்ச்சி கட்டாயம்

'கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர்க்கையின் போது, மாணவர்கள், பிளஸ் 1ல் தேர்ச்சி பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்' என, கல்லுாரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் சேர விண்ணப்பங்கள், வழங்கப்படுகின்றன. பிளஸ் 2வில் முக்கிய பாடங்களில், மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அனைத்து கல்லுாரிகளுக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர், சாருமதி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு, பிளஸ் 1 பாடம், பொது தேர்வாக அறிமுகமாகி உள்ளது. அதன்படி, பிளஸ் 1ல் அனைத்து பாடங்களிலும், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 தேர்ச்சி செல்லும். எனவே, இந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்தவர்கள், சென்ற கல்வி ஆண்டில், பிளஸ் 1ல் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனரா என்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




1 Comments:

  1. +1 2018march result marksheet peruvathu eppadi,

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive