Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2 பெண்குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்த பிரபல குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்! குவியும் பாராட்டு!


பிரபல மருத்துவர் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் சேர்ந்தவர் ராவணன். அரக்கோணம் நகரின் மிக முக்கியமான குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ராவணன். அந்த வகையில் அரக்கோணத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ராவணனுக்கு பரிச்சயமானவர்கள்.
சிறப்பான சிகிச்சை மற்றும் கரிசனமான கவனிப்பு போன்றவற்றால் ராவணனை தேடி ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வருவது வழக்கம். இப்படி தனது மருத்துவ துறையில் சாதனை படைத்து வந்த ராவணன் தற்போது மேலும் ஒரு செயலால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மருத்துவர் ராவணனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒருவர் பெயர் பூந்தளிர். மற்றொருவர் பெயர் பூந்துளிர். இந்த இரண்டு பெண் குழந்தைகளையும் தான் அவர் அரக்கோணத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.சாதாரண கூலித் தொழிலாளி தனது குழந்தைகள் ஆங்கில வழி கல்வியைப் பெறவேண்டும் என்று தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் இந்த காலத்தில் பிரபலமான மருத்துவர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளிகள் சேர்த்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ராவணனின் மனைவியும் கூட தனது குழந்தைகள் அரசுப் பள்ளியிலேயே படிக்கலாம் என்று ஒப்புக் கொண்டது தான்.
தான் அரசுப் பள்ளியில் பயின்ற மருத்துவர் ஆனதாகவும் அந்த வகையில் தனது குழந்தைகளும் அரசு பள்ளியில் படித்து வாழ்வில் தங்கள் லட்சியங்களை அடைவார்கள் என்கிற நம்பிக்கையில் சேர்த்துள்ளதாக இராவணன் நிகழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive