NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

100/100 சதவீதம் தேர்ச்சியில் அரசுப்பள்ளிகள் விகிதம் பெரும் சரிவு: கல்வியாளர்கள் அதிர்ச்சி

அரசுப் பள்ளிகளின் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெரிய அளவில் குறைந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிளஸ்டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச்  மாதம் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த ஏப்.19-ம் தேதி வெளியானது. ஏற்கெனவே அரசு உத்தரவுப்படி மாணவர்களின் தேர்ச்சி குறித்த புள்ளி விவரங்கள் மட்டுமே அளிக்கப்பட்டது.

அதில் பல புள்ளி விவரங்களை வெளியிடாமல் இருந்தனர். முக்கியமாக மாணவர்களில் எத்தனைப் பேர் எந்தப் பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றனர் என்ற விவரம்இல்லாமல் இருந்தது. அதேபோல் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு இடையே மாணவர்கள் எத்தனைப் பேர் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றனர் என்ற விவரமும் அளிக்கப்படவில்லை. இதே நேரத்தில் இதுபோன்ற உத்தரவால் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறித்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது தேர்வு விபரங்கள் லேசாக கசியும் நிலையில் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. தேர்வு முடிவில் பிளஸ்டூ தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 91.3 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் அரசுப்பள்ளிகள் எண்ணிக்கை  2700  ஆகும். இதில் 80 பள்ளிகள் மட்டுமே  நூறு சதவீதம்  தேர்ச்சி பெற்றுள்ளது. ஆனால்  1200 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

ஆனால் 2018- ம் ஆண்டு 238 அரசுப் பள்ளிகள்100 சதவீதம் தேர்ச்சியை  பெற்ற நிலையில், தற்போது வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றிருப்பது கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோன்று  இயற்பியல், வேதியியல், உயிரியல் என முக்கிய பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்றும், இரட்டை இலக்க எண்களில் மட்டுமே மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர் என்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாணவர்கள் கல்வித்தரம் உயரவேண்டும் என நடவடிக்கை எடுத்துவரும்வேலையில் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்த்தப்படவேண்டும், தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்புகள் செய்யப்படவேண்டும், கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.கல்விக்கான ஒதுக்கீடு, கட்டமைப்புகளை முறைப்படுத்தி அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் தனியார் பள்ளிகளுக்கும், அரசுப்பள்ளிகளுக்கும் உள்ள பெரிய இடைவெளி குறைக்கப்படவேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive