Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் பயோமெட்ரிக் முறை அமல்: அதிகாரிகள் தகவல்

*தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது*
*இதற்கான ஏற்பாடுகள் பள்ளிகல்வித்துறை சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக அனைத்து பள்ளிகளிலும், இந்தகல்வியாண்டு தொடக்கத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு கொண்டு வரப்படுகிறது*
*இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், ஆசிரியர், ஆசிரியைகளின் எண்ணிக்கை, ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை தயாரித்து வருகின்றனர்*
*இந்நிலையில் முதற்கட்டமாக 3,688 அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும், 4,040 மேல்நிலைப்பள்ளிகளிலும் இந்த பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது. இதை செயல்படுத்துவதற்காக அரசு பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது*
*அதன்படி ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படுள்ளது. தனி சாப்ட்வேரில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது*
*இதற்காக அமைச்சுப்பணியாளர்கள், கணினி பயிற்றுநர்களுக்கு பயோமெட்ரிக் முறை அமல்படுத்துவதற்கான பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது*
*இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது*
*பயோமெட்ரிக் வருகைபதிவேடு அமல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது*
*விவரங்களை பதிவு செய்வதற்காக தற்போது அமைச்சுப்பணியாளர்கள், கணினி பயிற்றுநர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மொத்தம் 24 கல்வி மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது*
*ஏற்கனவே அந்தந்த மாவட்டங்களுக்கு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் இந்த முறை அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive