*2019 மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்
தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களிடம் இருந்து சிறப்பு அனுமதி
திட்டத்தின்கீழ் (தட்கல்) ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது*
*ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தந்த மாவட்டங்களில்
அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு துறை சேவை மையங்களுக்கு ஏப்ரல் 23, 24ம்
தேதிகளில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்*
*தனியார் கணினி சேவை மையங்கள் (பிரவுசிங் சென்டர்கள்) மூலம்
விண்ணப்பிக்க முடியாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை
மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்*
*அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்கள், சமர்ப்பிக்க வேண்டிய
ஆவணங்கள் தொடர்பாக www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில்
அறிந்துகொள்ளலாம்*
*தேர்வு கட்டணம் 125, சிறப்பு அனுமதி கட்டணம் 500, ஆன்லைன் பதிவு கட்டணம் 50ஐ பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்*
*சிறப்புத் துணை பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஹால்டிக்ெகட்டை பதிவிறக்கம்
செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்