NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர 800 ஆசிரியர்களுக்கு உத்தரவு: யூஜிசி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு


தமிழக பள்ளிக் கல்வித்துறையின்கீழ் 6
ஆயிரம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 30 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், முதுகலைப் பட்டம் படித்தால் ஒரு ஊக்க ஊதியமும், எம்பில் அல்லது எம்எட் படித்தால் மற்றொரு ஊக்க ஊதியமும் வழங்கப்படுகிறது. இதனிடையே கோவை மண்டலத்திற்குட்பட்ட ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில், கடந்த இரு மாதங்களாக ஆண்டு தணிக்கை நடந்தது. அப்போது, 2008ம் ஆண்டுக்கு பிறகு பகுதி நேரமாக எம்பில் ஆய்வு படிப்பில் சேர்ந்து, அதற்கான ஊக்க ஊதியம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், அதனை திரும்ப செலுத்தும்படி உத்தரவிட்டு சென்றனர்.
இந்த விவகாரம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு, தொலைதூர கல்வி மூலமாக எம்பில் முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டாம் என கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், பகுதிநேரமாக படித்தவர்களை, ரெகுலர் போலவே கணக்கில் கொள்ளலாம் என யூஜிசி வழிகாட்டுதலில் உள்ளது. மேலும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தெரிவித்த பதிலில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில், துறை முன்அனுமதியோடு படித்திருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கோவை மண்டலத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்திர தணிக்கையின்போது, பகுதி நேரமாக எம்பில் முடித்த பலருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், 50 ஆயிரம் முதல் ₹2 லட்சம் வரை திரும்ப ெசலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, எந்தவொரு தெளிவான முடிவு கிடைக்கவில்ைல. குறிப்பாக, ஆர்டிஐ தகவலுக்கும், முதல்வரின் தனிப்பிரிவு அளித்த பதிலுக்கும் முரண்பாடுகள் உள்ளன. அதேபோல், யூஜிசி வழிகாட்டுதல்களையும் கண்டுகொள்ளாதது வெளிப்படையாக தெரிகிறது. எனவே, இந்த விவகாரத்தில், யூஜிசி வழிகாட்டுதல்களை தெளிவுபடுத்தி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையை நீக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive