கொரோனா அச்சுறுத்தலால் எமலோகத்தில் ஹவுஸ்புல் ஆக உள்ளது. அனைவரும் வீட்டில் இருக்குமாறு திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார், பொதுமக்களுக்கு நூதன முறையில் பேனர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வர போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதனை பொதுமக்கள் பொருட்படுத்தாமல் டூவீலர்களில் அடிக்கடி வெளியே சென்று வருகின்றனர். ஏற்கனவே இங்கு 45 பேர் வரை கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து பொதுமக்களுக்கு போலீசார் பலவகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார், ‘ஹவுஸ்புல்’ எமலோகத்தில் இடமில்லை என்றும், எமதர்மன் எருமையில் அமர்ந்து இருகரம் கூப்புவது போல படம் போட்டு, ‘தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ என கேட்டுக்கொள்வது போல் பேனர் வைத்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
2nd Mid Term Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
» எமலோகத்தில் ஹவுஸ்புல்... எல்லோரும் வீட்ல இருங்க... திண்டுக்கல் போலீஸின் ‘திகில்’ பேனர்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...